2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை

Freelancer   / 2022 மார்ச் 01 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(வ.திவாகரன்) 

மட்டக்களப்பு மாவட்டம், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  சாமந்தியாறு, பனையறுப்பான் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டன.

இதன்போது பெரும் எண்ணிக்கையிலான கோடாவுடனான பரல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட புலனாய்வுப் பிரிவு மற்றும் மாவட்ட புலனாய்வுப் பிரிவு ஆகியோருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத்  தகவலுக்கமைய  கொக்கட்டிச்சோலை பொலிஸ் பொறுப்பதிகாரி நலீன் குணவர்த்தன, போதைப்பொருள் ஒழிப்பு பொறுப்பதிகாரி ஆகியோர்களின்  தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சட்டவிரோதமாக இயங்கி வந்த உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டன.

இதன்போது,  3 ஆயிரத்து 960லீற்றர் கோடா, 100 லீற்றர் கசிப்பு, கசிப்பு உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டன. (K)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .