2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

கசிப்பு உற்பத்தி; இரு நாள்களில் 10 பேர் கைது

Princiya Dixci   / 2021 ஜூன் 09 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

பயணக் கட்டுப்பாட்டுக் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை குற்றச்செயல் அதிகரித்துள்ளதாக மாவட்ட மதுவரித் திணைக்களப் பொறுப்பதிகாரி நியூட்டன் அவுஸ்கோன் தெரிவித்தார்.

கடந்த இரு நாள்களில் இக்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து, மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்களம் தொடர்ச்சியான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

நேற்றும் நேற்று முன்தினமும் வெல்லாவெளி, கிரான் மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது, வெல்லாவெளி பிரதேசத்தில் இருவரும் கிரான் மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் எண்மரும் கைதுசெய்யப்பட்டதாகவும் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .