2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஓட்டமாவடியில் 700 லிட்ரோ கேஸ் விநியோகம்

Freelancer   / 2022 ஜூலை 15 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எச்.எம்.எம்.பர்ஸான்)

ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் இன்று (15) 700 லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்பட்டது. 

இன்று எரிவாயு விநியோகம் செய்யப்படும் எனும் தகவலை அறிந்து கொண்ட மக்கள் நேற்று (14) மாலை முதல் இன்று (15) மதியம் வரை நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

அந்தவகையில், ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவு மக்களுக்கு 350 எரிவாயு சிலிண்டர்களும் வாழைச்சேனை மத்தி பிரதேச செயலகப் பிரிவு மக்களுக்கு 350 சிலிண்டர்களும் பகிர்ந்தளிக்கப்பட்டன. 

ஓட்டமாவடி பிரதேச செயலக செயலாளர் வீ.தவராஜா மற்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய அதிகாரிகளின் மேற்பார்வையில் குடும்ப அட்டைகள் பெற்றுக் கொண்ட மக்களுக்கு மாத்திரம் எரிவாயு விநியோகம் செய்யப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .