2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

ஓட்டமாவடியில் கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் நிகழ்வு

Freelancer   / 2021 ஜூன் 09 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில், கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் நடைபெற்று வருகின்றது.

இந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில், ஓட்டமாவடி 2ம் வட்டாரம் மற்றும் ஓட்டமாவடி 3ம் வட்டார பிரிவிலுள்ள, அறுபது வயதிற்கு மேற்பட்ட பொது மக்கள் மற்றும் ஓட்டமாவடி சூடுபத்தினசேனையில், கொரோனாவில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் மையவாடியில் கடமையாற்றும் இராணுவத்தினர், ஆகியோருக்கு ஒட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில், கொவிட் 19 தடுப்பூசிகள் இன்று (9) ஏற்றப்பட்டது.

கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் நிகழ்வில், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதர் ஏ.எல்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அறுபது வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள், அனைவரும் தங்களது உயிரினை கொடிய கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக, இந்த தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளவும். 

இந்த தடுப்பூசி தொடர்பில் ஏதும் சந்தேகங்கள் இருப்பின், தடுப்பூசி நிலையத்தில் உள்ள வைத்தியரை அல்லது பொது சுகாதார பரிசோதகரை அனுகி, இது தொடர்பான விளக்கங்களை பெற்றுக் கொள்ள முடியும் என, ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு, 25,000 தடுப்பு ஊசிகள் முதல் கட்டமாக கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் பதினான்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் ஊடாக, தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரனின் வழிகாட்டலில் நடைபெற்று வருகின்றது.

மா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .