Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Mayu / 2024 ஓகஸ்ட் 06 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் ஐஸ் போதைப் பொருள் விற்பனை மற்றும் கசிப்பு, திருட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட 30 பேர் கடந்த ஒரு வாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐஸ் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஆறு பேர் காத்தான்குடி ஒல்லிக் குளம், புதிய காத்தான்குடி உட்பட பல இடங்களில் இருந்து ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவை தவிர கசிப்பு உற்பத்தி, கசிப்பு விற்பனை, மற்றும் வீடு உடைத்தல் மற்றும் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட 24 பேர் அடங்கலாக 30 பேர் கடந்த ஒரு வார காலத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்ட இவர்கள் செவ்வாய்க்கிழமை (06) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .