2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

ஐஸ் போதை பொருளுடன் இருவர் கைது

Janu   / 2024 ஏப்ரல் 30 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து ஐஸ்  போதை பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை (30) அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது . 

மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கமையவே  குறித்த கைது  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்  இதன்போது  , மோட்டார் சைக்கிள் ஒன்றில் கீழ்ப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  நிலையில் 14, 570 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது . 

இதன்போது கைது செய்யப்பட்ட நபர்கள் காத்தான்குடி மையவாடி வீதி மற்றும் காத்தான்குடி ஆறாம் குறிச்சி பிரதேசங்களை சேர்ந்தவர்கள்  எனவும்  அதில் ஒருவர்  பிரபல மென் பானம் ஒன்றின் முகவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும்  , குறித்த சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

ரீ. எல் ஜவ்பர்கான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .