2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ஏறாவூர் வியாபாரிகளுக்கு இறுதி அறிவித்தல்

Editorial   / 2021 டிசெம்பர் 09 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் நகர சபையின் புதிய சந்தை வியாபாரிகளுக்கான மீள் விண்ணப்பம் கோரல் தொடர்பான இறுதி அறிவித்தலொன்றை, ஏறாவூர் நகர சபை வெளியிட்டுள்ளது.

“2021.11.05ஆம் திகதிய 2253ஆம் இலக்க இலங்கை சனநாயக சோசலிஷக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகையில் மூன்று மொழிகளிலும் பகுதி IV (ஆ) இல் புதிய சந்தை தொடர்பான விளம்பரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

“அதன்படி, இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன் இச் சந்தையில் வியாபாரம் செய்வதற்கான குத்தகை உரிமையை பெற்றிருந்தவர்கள் இனிவரும் காலங்களில் தொடர்ந்து குறித்த சந்தையில் வியாபாரம் செய்ய விரும்பின் குத்தகை உரிமையை பெற்றிருந்தமை தொடர்பிலான உரிய ஆவணங்களை சபையின் செயலாளரிடம் சமர்ப்பித்து உறுதிப்படுத்திக் கொள்ளவும்

தவறும் பட்சத்தில் சந்தையின் குத்தகை உரிமையை இழந்தவராக கருதப்படுவர்” என்று அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .