2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஏறாவூர் பொதுச் சந்தை புனர்நிர்மாணம் மீள் மதிப்பீடு

Freelancer   / 2023 மார்ச் 23 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் பொதுச் சந்தையை மீள் நிர்மாணிக்கும் வேலைத் திட்டத்தை மீள் மதிப்பீடு செய்யும் நோக்கில், அரச பொறியியல் கூட்டுத்தாபன தலைவர் உட்பட உயரதிகாரிகள் குழு, ஏறாவூருக்கு நேற்று (22) கள விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

2016ஆம் ஆண்டு, நிர்மாணப் பணிகள் இடைநடுவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏறாவூர் பொதுச் சந்தையை மீள நிர்மாணிப்பதற்கான மதிப்பீட்டுத் தொகையை தீர்மானிப்பதற்காக இந்த விசேட குழு, கொழும்பிலிருந்து ஏறாவூருக்கு வருகை தந்திருந்தது. 

ஏறாவூர் பொதுச் சந்தையை 350 மில்லியன் ரூபாய் செலவில் மீள நிர்மாணிக்கும் நோக்கில், சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்டால், பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம் கூடி, அங்கு எடுக்கப்பட்ட தீர்மானத்துக்மைவாக இந்தக் குழு வருகை தந்திருந்தது.

அரச பொறியியல் கூட்டுத்தாபனத் தலைவர் சட்டத்தரணி ரட்ணசிறி கலுபஹன தலைமையிலான இக்குழுவில், பொது முகாமையாளர் பொறியியலாளர் பிரசாத் அமரசூரிய, உதவிப் பொது முகாமையாளர் சாந்தகுமார, பிரதான மதிப்பீட்டாளர் சுனந்த சிறிசேன, நிர்மாணப்பிரிவு பிரதிப் பொது முகாமையாளர் பிரியானி கருவிட்ட உட்பட இன்னும் பல அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.

ஏறாவூர் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் 2016ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் நகரத் திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சர் றவூப் ஹக்கீம் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் ஆகியோரினால் நாட்டி வைக்கப்பட்டதாகும். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .