2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ஏறாவூர் பட்ஜெட் ஏகமனதாக நிறைவேற்றம்

Editorial   / 2021 டிசெம்பர் 15 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் நகர சபையின் தலைவரால் சமர்ப்பிக்கப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான சுமார் 164 மில்லியன் ரூபாய்க்குரிய வரவு - செலவுத் திட்டம் (பட்ஜெட்) எவ்வித எதிர்ப்பின்றி, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக நகர சபைச் செயலாளர் எம்.ஆர் சியாஹுல்ஹக் தெரிவித்தார்.

அச்சபையின் விசேட சபைக் கூட்டமும் பாதீடு சமர்ப்பிப்பும், சபைத் தலைவர் எம்.எஸ். நழிம் தலைமையில், இன்று (15) நடைபெற்றது.

இது புதிய தலைவரின் இரண்டாவது பாதீடு சமர்ப்பித்தலாக அமைந்திருந்தது.

இக்கூட்டத்தில் ஏறாவூர் நகர சபையின் மொத்தமுள்ள அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் 17 பேரில் 14 பேர் கலந்துகொண்டிருந்தனர்.

ஏறாவூர் நகர சபையில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் சுயேட்சை குழு ஆகியவற்றின் உறுப்பினர்கள் முறையே 5, 4, 3, 2, 1, 1 மற்றும் 1 என்ற அடிப்படையில் ஆசனங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .