2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

ஏறாவூரில் ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவு முடக்கம்

Princiya Dixci   / 2021 ஜூன் 06 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஏறாவூர் சுகாதார அலுவலகப் பிரிவிலுள்ள ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று (06) தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதி மற்றும் மக்காமடி வீதி, ஓடாவியர் வீதிக்கு இடைப்பட்ட இலக்கம் 02 கிராம சேவகர் பிரிவே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

ஏறாவூரில் இதுவரை 234 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் மூன்றாவது அலையிலே 134 பேர் தொற்றாளர்களும் கடந்த 4 நாள்களில் 39 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

605 குடும்பங்களை சேர்ந்த சுமார் 2,000 பேர் வாழகின்ற இக்கிராம சேவகர் பிரிவிலே 24 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இருவர் கொரோனாவினால் மரணித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .