Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Princiya Dixci / 2021 ஒக்டோபர் 03 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
காத்தான்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிர்வாக அதிகாரியும் பிரபல எழுத்தாளருமான ஜுனைதா ஷெரீப் (கே.எம்.ஊம்.ஷரீப்), இன்று (03) அதிகாலை காலமானார். மரணிக்கும் போது அவருக்கு வயது 80 ஆகும்.
இவர், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளராகவும் கிழக்கு மாகாண பிரதித் தபால் மா அதிபராகவும் பல்வேறு அமைச்சுக்களில் செயலாளராகவும் நிர்வாகத்துறையில் பணியாற்றியுள்ளார்.
10க்கும் மேற்பட்ட நாவல்களையும் 100க்கும மேற்பட்ட சிறுகதைகளையும் 200க்கும் அதிகமான வானொலி நாடகங்களையும் எழுதிய இவர், இலங்கையில் அதிக தடவைகள் தேசிய சாகித்ய மண்டல வருதுபெற்ற முஸ்லிம் இலக்கிய வாதியாவார்.
சாணைக்கூறை என்ற இவரது சமூக நாவல் சர்வதே ரீதியில் புகழ் பெற்றதாகும்.
நாவல் இலக்கியத் துறைக்கு வழங்கப்படும் உலக விருதான கரிகாலன் விருதையும் இந்தியாவில் வைத்து இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago