Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2021 ஒக்டோபர் 11 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ.ஹுஸைன்
சர்வதேச உள நல தினத்தையொட்டி, மட்டக்களப்பு உள நல உதவி நிலையத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் தலைமையில்,மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (10) விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டது.
கொவிட் அச்சுறுத்தல் காரணமாக, கடந்த 2 வருடங்களாக இறுக்கமான மனநிலையில் உள்ள மட்டக்களப்பு மாவட்ட மக்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள நலம் தொடர்பில் பிரதேச மட்டத்தில் செயற்படும் உள நல உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்களை தெளிவுபடுத்தும் வண்ணம் இச்செயலமர்வு நடைபெற்றது.
வீடுகளில் முடங்கியுள்ள சிறுவர்கள், மகளிர் மற்றும் முதியவர்களை எவ்வாறாக உள நல ஆற்றுகை மேற்கொள்வது, அத்தோடு பாடசாலை மாணவர்களை உள நல ரீதியாக எவ்வாறு ஆற்றுகைக்கு உட்படுத்துவது போன்ற மேலும் பல விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
36 minute ago
51 minute ago
1 hours ago