Editorial / 2021 டிசெம்பர் 06 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன், எம்.எஸ். எம். நூர்தீன்
மட்டக்களப்பு இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் உதயரூபனை, பாடசாலையில் இருந்து இடம்மாற்றுமாறு கோரி, மட்டக்களப்பு சிவானந்தா தேசிய ஆண்கள் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அப்பாடசாலையின் பழைய மாணவர்கள், பாடசாலைக்கு முன்னால் இன்று (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றிவரும் மட்டக்களப்பு இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் உதயரூபன், தொழிற்சங்கம் என்ற பேர்வையில் பாடசாலையில் மாணவர்களுக்கு கற்பிப்பதில்லை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை அவர்கள் முன்வைத்தனர்.
அவரை இடமாற்றுமாறு கோரி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை பழைய மாணவர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
இதில் மட்டக்களப்பு மாநகர சபை மேஜர் ரி.சரவணபவான் மற்றும் மாநகர சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
“வேண்டாம், வேண்டாம் உதயரூபன் வேண்டாம்”, “ஆசிரியர் ஸ்தானத்துக்கு தகுதியற்ற உதயரூபனை வெளியேற்று”, “கல்வி கற்பிக்காத உதயரூபன் வேண்டாம்” மற்றும் “வலயக் கல்விப் பணிப்பாளரே உதயரூபனின் அடாவடித்தனத்தை நிறுத்து” போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், உதவி கல்விப் பணிப்பாளர் ரவிச்சந்திராவிடம் மகஜரைக் கையளித்த பின்னர் அங்கிருந்து விலகிச் சென்றனர்.
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago