2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

இ.போ.சபை ஊழியர்கள் வீதி மறியல் போராட்டம்

Freelancer   / 2022 ஜூலை 18 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இலங்கை போக்குவரத்து சபை வாழைச்சேனை கிளை ஊழியர்கள் சனிக்கிழமை (16) போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

வாழைச்சேனை இ.போ.சபைக்கு முன்பாக உள்ள பிரதான வீதியின் குறுக்கே பஸ் வண்டிகளை நிறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடமையினை மேற்கொள்ள தூர இடங்களிலிருந்து டிப்போவுக்கு வரும் எங்களுக்கு பெற்றோல் வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து ஊழியர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த வாழைச்சேனை பொலிஸாரும், இராணுவத்தினரும் போராட்டம் நடத்திய ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையை மேற்கொண்டனர்.

மேலும், ஊழியர்களுக்கு பெற்றோல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்ததற்கமைய ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .