Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Princiya Dixci / 2021 ஜூன் 25 , மு.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக இராஜாங்க அமைச்சரின் மெய்ப்பாதுகாவலரால் சுட்டுக்கொல்லப்பட்ட மணல் லொறி சாரதியான மகாலிங்கம் பாலசுந்தரத்தின் சடலம், நேற்று முன்தினம் (23) மாலை பெருமளவான மக்களின் கண்ணீருடன் ஊறணி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இதன்போது, “அமல் எங்கள் நண்பனை மீட்டுத்தர முடியுமா?” “கரங்கொடுத்து தூக்கிவிட்டவர்களை காலடியில் நசுக்கும் விசமிகளின் பசிக்கு இரையாகிய அப்பாவி இளைஞனின் மரணத்துக்கு நீதிவேண்டும்” போன்ற கோரிக்கை தாங்கிய பதாகைகளை, சடலம் தாங்கிய பேழை ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் மாத்திரமே அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக சடலம் வைக்கப்பட்டிருந்தது. அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப் பலர் அஞ்சலி செலுத்தினர்.
இதனையொட்டி, சடலம் வைக்கப்பட்டிருந்த பகுதியெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago