2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

இரு கிராமங்களை விடுவிக்க பரிந்துரை

Princiya Dixci   / 2021 மே 28 , பி.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பில் தனிமைப்படுத்தப்பட்டு, முடக்கப்பட்ட கிரான்குளம் மற்றும் கிரான்குளம் மத்தி ஆகிய இரு  கிராம சேவகர் பிரிவுகளையும் விடுவிக்க பரிந்துரை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கொரோனா தடுப்புச் செயலணிக்கு இன்று (28) இப்பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்

ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிரான்குளம் மற்றும் கிரான்குளம் மத்தி ஆகிய இரு கிராம சேவகர் பிரிவுகளிலும் பி.சி.ஆர்  பரிசோதனையில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள்  கண்டறியப்பட்டதையடுத்து, அந்த இரு கிராம சேவகர் பிரிவுகளும் கடந்த 14ஆம் திகதி முடக்கப்பட்டன.

இந்நிலையில், இப்பிரிவுகளில் தொடர்ச்சியாக அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளில் தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படாத நிலையில் அவற்றைத் திறப்பதற்கு முடிவு செய்து அதற்கான பரிந்துரைகளை, தேசிய கொரோனா தடுப்புச் செயலணிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .