2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

இரத்தத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜவ்பர்கான்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இரத்தத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, இரத்த தான முகாமொன்று, மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (29) நடைபெற்றது.

தற்போது மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், சுகாதார வைத்திய அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய, சுகாதார பாதுகாப்பு நடைமுறையின் கீழ், மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில், செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் இரத்த தான முகாம் நடைபெற்றது.  

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இரத்த தான நிகழ்வில், போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்தியர் கீர்த்திகா மதழகன், போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவு தாதி உத்தியோகத்தர்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .