2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

இரண்டு நாள்களில் நான்கு கேஸ் அடுப்புகள் வெடிப்பு

Editorial   / 2021 டிசெம்பர் 12 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு நாள்களில் நான்கு கேஸ் அடுப்புகள் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.

அந்தவகையில், பிறைந்துறைச்சேனை பகுதியில் இரண்டு கேஸ் அடுப்புகள், ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பகுதியில் தலா ஒரு கேஸ் அடுப்புகள் என நான்கு கேஸ் அடுப்புகள், வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை வெடித்து சேதமாகியுள்ளன.

இந்நிலையில், வீடுகளில் இருந்தவர்கள் எவருக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், கேஸ் அடுப்புக்கள் மாத்திரமே வெடித்துள்ளதாவும் வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .