2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

இப்படியும் நடக்கிறது

Editorial   / 2021 டிசெம்பர் 20 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன் 

நாட்டில் எரிவாயு சிலிண்டர் அடுப்புகள் வெடித்துவரும் நிலையில் புதிதாக வாங்கிய காஸ் சிலின்டர் வெடிக்க கூடாதென கடவுளுக்கு நேந்து  துணியில் காசுகட்டி அதனை சிலிண்டரில் கட்டி சமையலில் ஈடுபட்டு வருகின்ற சம்பவமொன்று   மட்டக்களப்பு ஆரையம்பதியில்   இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றை பொலிஸார் முற்றுகையிட்டு  சோதனையின் போது கசிப்புடன் பெண்ணொருவரை கைது செய்தனர்

இதேவேளை, குறித்த வீட்டின் சமையலறையில் சோதனையின்போது அங்கிருந்த எரிவாயு சிலிண்டரில், மஞ்சல் துணியொன்றில் காசு கட்டப்பட்டுள்ளதை அவதானித்துள்ளார்.

  இது தொடர்பாக பொலிஸார் விசாரித்தபோது எரிவாயு சிலிண்டர் அடுப்பு வெடித்துவிடக் கூடாதென கடவுளுக்கு நேந்து காசு கட்டியுள்ளதாக அப்பெண் விளக்கமளித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .