Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 ஜூலை 11 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியர் சங்கமும் உடனடியாக இணையவழிக் கற்பித்தலில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சிவக்கொழுந்து ஜெயராஜா, இன்று (11) அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில் குறிப்பிப்பட்டுள்ளதாவது, “நாட்டின் சுகாதாரப் பாதுகாப்புக்கருதிக் கொண்டுவரப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டமானது, இன்று அரச எதிர்ப்புத் தொழிற்சங்க முன்னெடுப்பிற்கு எதிராகப் பயன்படுத்தப்படுவது தொழிற்சங்க நடவடிக்கைக்கு எதிரான, உரிமை மீறலும் கண்டனத்துக்குரியதுமாகும்.
“இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 31 தொழிற் சங்கப் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் எந்தவிதக் காரணமும் இன்றித் தனிமைப்படுத்தல் சட்டத்தின்கீழ், முல்லைத்தீவில் தனிமைப்படுத்தியமை அரச அடக்குமுறையின் உச்சக்கட்டமாகவே கருத முடியும்.
“அரச வைத்தியர்களின் இரு நாள்களுக்கு மட்டும் மேற்கொள்ளப்பட்ட பணிப்பகிஸ்கரிப்பிற்காக அவர்களின் 07 அம்சக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, 42 வருடங்களாகப் போராடிவரும் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையைக் கண்டுகொள்ளாதிருப்பது ஏன்?
“ஆகவே, அனைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் உடனடியாக இணைய வழிக்கற்பித்தலில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும். கட்டணம் அறவிட்டு மேற்கொள்ளப்படும் இணையவழிக் கற்பித்தலும் நிறுத்தப்படவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
51 minute ago
57 minute ago
2 hours ago