2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ஆழ்கடலுக்கு சென்ற மீனவர் திடீர் மரணம்

Editorial   / 2021 டிசெம்பர் 27 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் திடீரென மரணமடைந்த நிலையில் இன்று (27) வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.

அசன்பாவா வீதி, பிறைந்துறையைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான படகு சாரதி (ஸ்கீப்பர்) எம்.ஐ.எம்.பாறுக் (வயது 47) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று (26) ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் திடீரென இரவு ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக படகில் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அவருடன் சென்றவர்கள், அவரை மீண்டும் சடலமாக கரைக்குக் கொண்டுவந்ததாக பொலிஸார் தெரிவித்தார்.

சடலம், பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை துறைமுகத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் உயிரிழந்த மீனவருக்கு கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலதிக நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .