2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஆரையம்பதி ஐ.ஓ.சி குழப்பம்; ஒருவர் கைது

Princiya Dixci   / 2022 ஜூலை 21 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் நூர்தீன் , ரீ.எல்.ஜவ்பர்கான், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தூர பகுதிகளில் பணிபுரியும் அரச உத்தியோகத்தர்களுக்காக அரச திணைக்கள வாகனங்களில் கலன்கள் கொண்டு வரப்பட்டு, ஆரையம்பதி - தாழங்குடா லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் விநியோகப்பட்டபோது குழப்பம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இதன்போது அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் நேற்று (20) ஒருவரை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கே.கருணாகரனின் வேண்டுகோளுக்கு இணங்க, கடந்த 16ஆம் திகதி அரச உத்தியோகத்தர்களுக்காக குறித்த எரிபொருள் நிலையத்தில் பெட்டோல் விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது தவறுதலான புரிதலினால் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருந்த பொதுமக்கள் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன், ஒரு சிலரால் அரச சொத்துகளான சில வாகனங்கள் சேதமாக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரனையின் போதே, குறித்த சம்பவத்தின் போது பொது உடமைக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் காத்தான்குடியை சேர்ந்த 32 வயது இளைஞனை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .