2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஆதார வைத்தியசாலை முன்பாக தாதியர்கள் ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2022 மார்ச் 14 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி         

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை முன்பாக இன்று (14)  நண்பகல் 12 மணியிலிருந்து 1 மணி வரையில் பதாகைகளை ஏந்தியவாறு தாதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய அமைச்சரவைப் பத்திரத்தை வழங்குக”, “திருத்தியமைத்த சம்பள முறைமையை தாதிய பட்டதாரிகளுக்கு வழங்குக”, “சம்பள முரட்பாட்டை நீக்குக”, “சுகாதார நிர்வாக சேவையில் தொழில் வல்லுநர்களை உள்ளடக்குக”, “விசேட கடமைக் கொடுப்பனவை 10,000 ரூபாயாக வழங்குக” மற்றும் “பதவி உயர்வுகளை தாமதமின்ற வழங்குக” உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாதியர்கள் இதன்போது ஏந்தியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .