Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஏப்ரல் 05 , மு.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ ஹுஸைன்
கல்வி அமைச்சின் றமழான் மாத வழிகாட்டல் நிகழ்வுகளை, றமழான் நோன்பு முடிவடைவதற்கு இடையில் நடைமுறைப்படுத்துமாறு, மட்டக்களப்பு மத்தி. கல்வி வலயத்திடம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்க மட்டக்களப்பு கிளை முஸ்லிம் பிரிவின் செயலாளர் றமழான் றிக்கினாஸ் தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தி கிளை, றமழான் மாதத்தை வினைதிறன் மிக்கதாக்குவதற்கான வழிகாட்டல் கடிதத்தை சகல முஸ்லிம் பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பியுள்ளது.
கல்வி அமைச்சு, சகல முஸ்லிம் பாடசாலைகளிலும் பொருத்தமான தினமொன்றில் நோன்பு திறக்கும் (இப்தார்) நிகழ்வை ஏற்பாடு செய்வது பொருந்தமானதாக கூறியுள்ளது.
அத்துடன், அந்த நிகழ்வில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், ஆசிரியர்கள், மாணவத் தலைவர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க மற்றும் பழைய மாணவ உறுப்பினர்களையும் பங்குபற்றச் செய்து இந்நிகழ்வை திறம்பட மேற்கொள்ளுமாறும் வேண்டியுள்ளது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .