2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

அளுத்கமவில் இருந்து மட்டக்களப்பிற்கு வந்த வல்லல்பட்டை

Freelancer   / 2022 பெப்ரவரி 19 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்  

மட்டக்களப்பு - கண்ணகை அம்மன் ஆலய வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் வல்லல்பட்டையுடன் தங்கியிருந்த  அளுத்கம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை நேற்று மாலை கைது செய்துள்ளதுடன் 1, 700 கிராம்  வல்லல் பட்டையை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிஎஸ்.பி. பண்டார தெரிவித்தார்.

மட்டக்களப்பு இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய, மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிஎஸ்.பி. பண்டார தலைமையில்லான பொலிசாருடன் இணைந்து சம்பவதினமான இன்று மாலை கண்ணகி அம்மன் ஆலய வீதியிலுள்ள விடுதிஒன்றை முற்றுகையிட்டு குறித்த அறையை பொலிசார் சோதனை நடவடிக்கையின் போது 1, 700 கிராம் வல்லல்பட்டடையை கைப்பற்றியதையடுத்து அங்கிருந்த ஒருவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் அளுத்கம பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடையவர் எனவும், மட்டக்களப்பில் வல்லல்பட்டையை விற்பனை செய்வதற்காக அதன் மாதிரியுடன் வந்து விடுதியில் தங்கியிருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பெரும் தொகையான  வல்லல்பட்டை அளுத்கமவில் பதுக்கி வைத்திருப்பதாகவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .