Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Princiya Dixci / 2021 ஜூன் 02 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஓட்டமாவடி பதிவாளர் பிரிவால் மேற்கொள்ளப்பட்டுவந்த பிறப்பு, இறப்பு பதிவுகளை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் கீழ் கொண்டுவரும் நடவடிக்கையை உடன் நிறுத்துமாறு, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்விடயமாக பிரதமர், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர், பதிவாளர் நாயகம் ஆகியோருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரால் 31.05.2021 அன்று பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஓட்டமாவடி பதிவாளர் பிரிவால் மேற்கொள்ளப்பட்டு வந்த பிறப்பு, இறப்பு பதிவாளர் கடமைகளை கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலக பதிவாளர் பிரிவின் கீழ் மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளது.
“மேற்படி பிறப்பு, இறப்பு நிகழும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை நில அளவையின் மூலம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்துக்குட்பட்டுள்ள அதேவேளை, ஓட்டமாவடி பிரதேச செயலக பதிவாளர் அலுவலகமே இதுவரை பதிவுகளை மேற்கொண்டு வந்தது.
“இதனடிப்படையில், கடந்த 48 வருடகாலமாக ஐந்து பதிவாளர்கள் பிறப்பு மற்றும் இறப்பு ஆவணங்களைப் பெற்று பதிவு செய்துள்ளனர்.
“மாவட்டச் செயலாளரின் இவ்வாறான இனவாத ரீதியான செயற்பாடுகள் சமூகங்களிடையே முறுகல் நிலைமைகளை ஏற்படுத்த தூண்டுகோலாக அமைந்துவிடும்.
“எனவே, இவ்வாறான பக்கச் சார்பான நிர்வாக நடைமுறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago