2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு

Princiya Dixci   / 2021 ஜனவரி 05 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், க.விஜயரெத்தினம், வ.சக்தி, கனகராசா சரவணன், ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப்பூங்காவுக்கு முன்னால் இன்று (05) காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 

அரசியல் கைதிகளின் குடும்பங்கள், சிவில் அமைப்புக்கள், வடக்கு, கிழக்கு வாழ் பொதுமக்கள் ஆகியோரின் ஏற்பாட்டில், சுகாதார நடைமுறைகளைப் பேணி இந்தப்  போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தின் போது, கைகளில் பதாதைகளை தாங்கியவாறு தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு அவர்கள் வலியுறுத்தினர்.

“தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்து, நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துக”, “இலங்கை அரசாங்கமே தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கு”, “தமிழ் அரசியல் கைதிகளின் மீது பாரபட்சம் காட்டாதே”,"கொரோனோ அச்சத்துக்கு மத்தியிலும் தமிழ் அரசியல் கைதிகளை தடுத்து வைத்திருப்பது மனித உரிமை மீறலாகும்" போன்ற வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர் தாங்கியிருந்தனர்.

இந்தப் போராட்டத்தில் மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தியாகராசா சரவணபவன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.யோகேஸ்வரன், பி.அரிய நேந்திரன், மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் தலைவர் சீலன் உட்பட அரசியல் செயற்பாட்டளார்கள், சிவில் சமூக பிரதி நிதிகள், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்ப உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .