2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

அரசாங்கத்திடம் இருந்து மக்களை பாதுக்காக்கவேண்டும்

Freelancer   / 2022 பெப்ரவரி 16 , பி.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி. அன்சார் 


தேசிய பாதுகாப்பையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவே  தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால், அரசாங்கத்திடம் இருந்து மக்களைப் பாதுகாப்பதே  இன்று எமது நோக்கமாக இருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
 
ஆரோக்கியமான நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் “ஜனசுவய” சமூக நலன் திட்டத்தின் ஊடாக 3 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எதிர்க்கட்சித் தலைவரினால் அன்பளிப்புச் செய்யப்பட்டது. 

 வைத்திய அத்தியேட்சகர் ஆசாத் எம். ஹனீபா தலைமையில் இந்த வைபவம் நேற்று (15) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே - தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு அவ்வப்போது புதிய பரிசுகளை வழங்கி வருகிறது.  உரம் வழங்கும் நடைமுறையை இல்லாமலாக்கிய ,  வெடிக்கும் எரிவாயு சிலிண்டர்கள் போன்றவற்கை வழங்குகின்றது. 
 
சுபீட்சத்தின் தொலைநோக்கு என்ற பார்வைக்குப் பதிலாக “இருளின்  நோக்கு” பார்வையையே அரசாங்கம் செயல்படுத்தி வருகின்றது.
கருத்து சுதந்திரம், பேச்சு உரிமை, அரசியல் சுதந்திரம் போன்ற அனைத்து உரிமைகளையும் அரசாங்கம் மீறிச் செயல்படுகின்றது. 24 மணி நேரமும் மக்களின் உரிமைகளை மீறும் அரசாங்கமே இன்று ஆட்சியில் இருக்கின்றது என்றார். 
 
200 மில்லியனுக்கும் மேல் வரி வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு 25 சதவீதம் மிகைக் கட்டண அறவீட்டிற்கு ஊழியர் நம்பிக்கை நிதியம், ஊழியர் சேமலாப நிதியம் உள்ளிட்ட 11 நிதியங்கள் உள்ளடக்கப்படவில்லை என நிதியமைச்சர் கூற வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார். 
 
ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தினாலயே நிதியங்களில் கை வைக்கும் முயற்சியில் அரசாங்கம் ஒரு அடி பின்வாங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .