Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Freelancer / 2022 பெப்ரவரி 24 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
வறக்காபொலயில் இருந்து மட்டக்களப்பிற்கு கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப் பொருளுடன் மூவர் பார்வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார இதை தெரிவித்தார்.
இன்று(24) அதிகாலை 1.00 மணியளவிவ் கிடைக்கப்பெற்ற தகவலொன்றை அடுத்து பார்வீதியில் வைத்து சுமார் 45 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான நபர்கள் கடத்தலுக்குப் பயன்படுத்திய டிமோ பட்டா வாகனம் யைடக்கத் தொலைபேசிகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
28 minute ago
36 minute ago
41 minute ago