2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

12 மணிநேர கார்டின் பந்தயப்போட்டி வெற்றிகரமாக நிறைவு

Editorial   / 2024 நவம்பர் 07 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிகவும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியிருந்த ஸ்பீட்பே 12 மணிநேர கார்டின் மோட்டார் பந்தையப்போட்டி இலங்கையில் முதல் தடவையாக பண்டாரகம ஸ்பீட்பேயில் ஒக்டோபர் 19ம் திகதி மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றது.

 12 அணிகள் பெருமைக்குரிய சவாலை வெற்றி கொள்ள போட்டியிட்டு தமது பந்தய ஓட்டுனர்கள் மற்றும் அணி முகாமையாளர்களின் அதிஉச்ச திறமையை வெளிப்படுத்தின. ஓவ்வொரு அணியிலும் 06 ஓட்டுனர்கள் அடங்கியிருந்தனர். இதன் போது அணி முகாமையாளர்களும் திடலில் செயற்பட்ட அணியும் முக்கிய பங்கினை வழங்கினர். விரைவான திடல் முகாமை மற்றும் சிறப்பான திட்டமிடல் இந்த பந்தயத்தில் மிகவும் அவசியமாகும்.

 12 மணிநேர காலக்கெடுவிற்குள் அதிக சுற்றுகளை நிறைவு செய்வதே இலக்காக இருந்தது மற்றும் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு பந்தயம் முடிவடைந்ததால் அதிகபடியான பார்வையாளர்கள் ஈர்க்கப்பட்டனா. Asriel Flash Squad Racing, Spark Racing by Mega Solar, S. Thomas' College, Octane Racing, Mach 1 Racing, RHC Racing, Macson Mesh, Sysco LABS, Kartmen, Totachi Racing, Team LME மற்றும் ; Iron Maidens ஆகிய அணிகள் பங்கேற்றன.

வெற்றி பெற்ற அணி ஆஸ்ரியல் ஃப்ளாஷ் ஸ்குவாட் 1004 சுற்றுகள் பூர்த்தி செய்து சாதனை படைத்தது. குழு உறுப்பினர்களான இஷான் முனவீர (அணி முகாமையாளர் மற்றும் சாரதி), ரியான் டி புரூயின், சக்தி குணசேகர மற்றும் தினுக விஜேரத்ன ஆகியோரின் செயல்திறனுடன், அவர்களின் பிட் குழுவான அனுர விஜேரத்ன மற்றும் லஹிரு லியனகே ஆகியோரின் ஆதரவுடன் வெற்றியை உறுதி செய்தனர். 2வது இடத்தை  மெகா சோலரின் ஸ்பார்க் ரேசிங் குழு வென்றது. இதில் அம்ஜத் இப்திகர், அர்ஷர்த் இப்திகார், டிமல் சுபசிங்க, ஜெஃப்ரி சாலிஹீன் மற்றும் அவிஷ்கா பிரேமதாச ஆகியோருடன் ஷெஹான் சில்வாவினால் நிர்வகிக்கப்படும் அவர்களது பிட் குழுவான நுவான் ஜயசிங்க மற்றும் மலிந்த பெரேரா ஆகியோர் அவர்களுக்கு ஆதரவளித்தனர்.

 3வது இடத்தை புனித. தோமஸ் கல்லூரியின் அணி பெற்றது, கெவின் பரனகே, ரஹெல் அபேரத்ன, ஆதம் ஜுனைட், அமிதேஷா சென்திஸ்குமாரன் மற்றும் ரயான் குணவர்தன ஆகியோர் 40.718 வினாடிகளில் வேகமான நேரத்தைக் கடந்து பாராட்டத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்களின் அணியை சாஹல் சாலிஹ் மற்றும் எம ஆசாத் மற்றும் எஸ். குமாரா அடங்கிய பிட் குழுவினர் நிர்வகித்தார்கள்.

 இலங்கையின் பந்தய ஜாம்பவான் திலந்த மாலகமுவ டோட்டாச்சி ரேசிங் அணியின் ஒரு அங்கமாக போட்டியிட்டமை ஒரு சிறப்பம்சமாகும். சுர்வதேச GT பந்தயத்தில் அவரது அனுபவத்தை காட்சிபடுத்தியமை தெளிவாக இருந்தது. மேக் 1 ரேசிங்கும் ஆக்டேன் ரேசிங்கும் இறுதி 45 நிமிடங்களில் இரண்டு கார்ட்களுக்கும் இடையே ஒரு வினாடியில் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவான இடைவெளியில் போட்டிக்கு விறுவிறுப்பான முடிவைக் குறிக்கும் புள்ளிகளில் போட்டியிட்டபோது பாதையில் உற்சாகம் கடைசி வரை தொடர்ந்தது.

இலங்கையின் முதலாவது 12-மணி போட்டி நடைபெறும் போது,; சந்தோஷமான மற்றும் சுறுசுறுப்பான பந்தய நடவடிக்கையை அவர்கள் காண வேண்டும் என்ற ஆவலுடன் இருந்தனர்.இந்த நிகழ்வு, பங்கேற்பாளர்களுக்கு மிகுந்த சவால்களை வழங்கி, அனைவருக்கும் உண்மையில் தனித்துவமான அனுபவத்தை; வழங்கியது.

12-மணி கார்டிங் பந்தயத்தில் ஓட்டுநர்கள் தங்களின் எல்லைகளை கடந்தனர். இதற்கான முக்கிய காரணிகள் பலம், கவனம், யோசனை, மற்றும் குழுத் முயற்சி ஆகியவை மிக முக்கியமானவை. ஒவ்வொரு குழுவின் ஓட்டுநர்கள் FIA-CIK அங்கீகரிக்கப்பட்ட SpeedBay Karting Track இல் முறைப்படி போட்டியை புதிய உச்சிக்கு கொண்டு செல்ல முயன்றனர்.

இந்த சாம்பியன்ஷிப்பில் முன்னறிவு, திறமையான pit stops ஒழுங்கு, மற்றும் சக்தி அளவுகளை நன்கு பராமரிக்க வேண்டும். ஓட்டுநர்கள் வண்டிக்கு திரும்பும்போது, வெற்றி என்பது வேகத்தில் மட்டும் அல்ல் சரியான நேரத்தில் செய்யப்படும் யோசனையுடன் உள்ள செயல்பாடுகள் மற்றும் ஒவ்வொரு குழுவின் ஓட்டுநர்கள் ஒருங்கிணைப்பில் இருப்பது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

 "12 மணிநேர பந்தயத்தை முடிப்பது உள்ளூர் மோட்டார் போட்டியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை பிரதிபலிக்கிறது. அணிகளின் தயாரிப்பு நிலை மற்றும் பார்வையாளர்கள் காட்டிய ஆர்வத்தை நாங்கள் பாராட்டினோம்; அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் உற்சாகம் இந்த விளையாட்டில் எங்களிடம் உள்ள திறனை எடுத்துக்காட்டுகிறது," என்கிறார். எஷான் பீரிஸ், தலைவர் - டேவிட் பீரிஸ் ரேசிங் மற்றும் ஓய்வு.

 இந்த ஆண்டின் தொடக்கத்தில், SpeedBay 6-மணிநேர சாம்பியன்ஷிப்பை நடத்தியது, மேலும் கடந்த சனிக்கிழமை விரிவாக்கப்பட்ட 12-மணிநேர நிகழ்வின் மூலம், போட்டி தொடர்ந்து வளர்ந்து வருவதால், ரசிகர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் அடிக்கடி மற்றும் பெரிய அளவிலான பந்தயங்களை எதிர்நோக்கலாம்.

ஸ்பீட்பே 6 மணிநேர சாம்பியன்ஷிப் சுற்று 3 இன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிச் சுற்று 2024 நவம்பர் 23, சனிக்கிழமையன்று ஸ்பீட்பே பண்டாரகமவில் நடைபெற உள்ளது.

ஸ்பீட்பே 12-மணிநேர எண்டுரன்ஸ் கார்டிங் சாம்பியன்ஷிப் 2024, மோட்டார் ரேசிங் அசோசியேஷன் மற்றும் சிலோன் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியவற்றுடன் இணைந்து பண்டாரகமவின் பேர்ல் பேயில் ஸ்பீட்பேயால் ஏற்பாடு செய்யப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டது. சாம்பியன்ஷிப் MRF ரயர்ஸ், ATLAS ரயர்ஸ் ஆகியவற்றால் அனுசரணை  செய்யப்பட்டது

டேவிட் பீரிஸ் குழுமத்தின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பிரிவான டேவிட் பீரிஸ் ரேசிங் அன்ட் லெஷர் (பிரைவேட்) லிமிடெட் இற்கு ஸ்பீட்பே சொந்தமானது மற்றும் அதனால் இயக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X