2024 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை

ஸ்பீட்பே எண்டூரன்ஸ் கார்டிங் சாம்பியன்ஷிப் - 2024

Mayu   / 2024 ஜூலை 23 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பீட்பே எண்டூரன்ஸ் கார்டிங் சாம்பியன்ஷிப் 2024 ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு கடந்த சனிக்கிழமை, ஜூலை 13 அன்று தொடங்கியது. பண்டாரகமவில் உள்ள FIA-CIK சான்றளிக்கப்பட்ட ஸ்பீட்பே கார்டிங் ட்ராக்கில் நடைபெற்ற இந்த 6 மணி நேர நிகழ்வானது 13 அணிகள் மற்றும் மூலோபாய குழு முகாமையாளர்களை ஒன்றிணைத்தது.

மழையடனான காலநிலை கார்டிங் அணிகளுக்கு அவர்களின் பந்தயத்திற்கு முந்தைய உத்திகளுக்கு ஒரு சவாலாக இருந்த போதிலும், அதற்கு பதிலாக வானிலையை எதிர்கொள்ள புதிய தந்திரோபாய நகர்வுகளை மாற்றியமைத்து பந்தயம் முழுவதும் திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

இருந்தபோதிலும், ஓட்டுநர்களின் திறமையையும், ரேஸ் அதிகாரிகளின் முக்கிய பங்கையும் இது வெளிப்படுத்த முடிந்தது.

ACBT அணி கடுமையான போட்டி மற்றும் கணக்கிடப்பட்ட சூழ்ச்சி மூலம் 449 சுற்றுகளுடன் முதலிடத்தைப் பெற்றது. எரத் கருணாரத்னவால் தலைமையில் தியாகோ பெரேரா,, சச்சித் பெர்னாண்டோ, இனுக் மத்துமராச்சி மற்றும் மெத்யூ கருணாரத்ன ஆகியோரைக் கொண்ட வெற்றி பெற்ற அணி, மழைப் பாதையிலும் வெற்றிகரமான எண்ணிக்கையை தொடர்ந்து நிறைவு செய்வதற்கு மிகுந்த சகிப்புத்தன்மையையும், திறனையும் வெளிப்படுத்தியது.

இரண்டாவது இடத்தை இஷான் முனவீர தலைமையிலான ஃப்ளாஷ்ஸ்குவாட் ரேசிங், அணி உறுப்பினர்களான தினுக விஜேரத்னே, ரியான் டி புருயின் மற்றும் சக்தி குணசேகர ஆகியோர் பெற்றனர், மூன்றாம் இடத்தை எம்டாட் {ஹசைன், அதீப் கஸ்ஸாலி, பண்டாரா, மற்றும் அனிகா அரிஃப் ஆகியோர் அடங்கிய இன்ஷாப் இக்பால் தலைமையிலான மக்சன் மெஷ் அணி பெற்றுக்கொண்டது.

ஏற்பாட்டாளர்களின் கருத்துபடி, போட்டியின் முடிவை தீர்மானிப்பதில் குழி நிறுத்தங்கள் ஒரு அடிப்படை பங்கைக் கொண்டிருந்தன. அணிகளில் ஆறு ஓட்டுநர்கள் வரை அனுமதிக்கப்பட்டனர்,

நிகழ்வின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக, அயர்ன் மெய்டன்ஸ் என்ற பெண் கார்டிங் அணியில் பங்குபற்றியமையாகும். இது இலங்கையின் மோட்டார் ஸ்போர்ட்ஸில் வளர்ந்து வரும் பன்முகத்தன்மைக்கு முக்கியத்துவம் வெளிப்படுத்தியது. குறிப்பாக மோட்டார் பந்தயத்தில் FIA சான்றளிக்கப்பட்ட பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்து வருகிறது.

இந்த நிகழ்வு மூன்று சுற்றுகள் கொண்ட தொடரின் ஒரு பகுதியாகும், இரண்டாவது சுற்று செப்டம்பர் 7 ஆம் திகதியும், இறுதிப் போட்டி நவம்பர் 9 ஆம் திகதியும் திட்டமிடப்பட்டுள்ளது.

அசெட்லைன் ஃபைனான்ஸ், அசெட்லைன் ஃபைனான்ஸ் டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பெனி (பிரைவேட்) லிமிடெட், டேவிட் பீரிஸ் சோலார் எனர்ஜி டேவிட் பீரிஸ் ரினவபிள் எனர்ஜி (பிரைவேட்) லிமிடெட், எம்ஆர்எஃப் மற்றும் அட்லாஸ் டயர்ஸ் டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பெனி (பிரைவேட்) லிமிடெட்,ரூடவ்-டிரைவ் மின்சார டாக்ஸி சேவை டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பெனி (பிரைவேட்) லிமிடெட், BAIC மற்றும் NETA மூலம் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்),மற்றும் டீலோ (பிரைவேட்) லிமிடெட் ஆகிய நிறுவனங்களால் விலைமதிப்பற்ற பங்;களிப்பும் அனுசணையும் இப்போட்டிக்கு வழங்கப்பட்டன.

டேவிட் பீரிஸ் ரேசிங் அன்ட் லெசர்; (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான மற்றும் அதனால் பராமரிக்கப்பட்டு வரும் டேவிட் பீரிஸ் குழுமத்தின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பிரிவான ஸ்பீட்பே பண்டாரகமவில் ஏற்பாடு செய்திருந்த ஸ்பீட் பே என்டூரன்ஸ் கார்டிங் சாம்பியன்ஷிப் 2024 இன் முதல் சுற்று வெற்றிகரமாக நிறைவுற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .