2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

யூரோ: ஒஸ்திரியாவிடம் தோற்ற நெதர்லாந்து

Shanmugan Murugavel   / 2024 ஜூன் 26 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடரில், செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற ஒஸ்திரியாவுடனான குழு டி போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து தோற்றது.

அந்தவகையில் விலகல் முறையிலான இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டிக்கு ஒஸ்திரியா தகுதி பெற்றுள்ளது.

இதேவேளை பிரான்ஸ், போலந்துக்கிடையிலான மற்றைய குழு டி போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

இந்நிலையில், புதன்கிழமை (26) நடைபெற்ற இங்கிலாந்து, ஸ்லோவேனியாவுக்கிடையிலான குழு சி போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

இதேவேளை, டென்மார்க், சேர்பியாவுக்கிடையிலான குழு சி போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவைடைந்த நிலையில் டென்மார்க்கும் விலகல் முறையிலான சுற்றுக்குத் தகுதி பெற்றது. டென்மார்க்கும், ஸ்லோவேனியாவுக்கும் அனைத்தும் சமமாக இருந்தபோதும் ஸ்லோவேனியாவின் உதவிப் பயிற்சியாளர் பெற்ற மஞ்சள் அட்டை வித்தியாசம் காரணமாகவே அவ்வணி விலகல் முறையிலான சுற்றுக்குத் தகுதி பெறத் தவறியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .