2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

யுனைட்டெட்டை வென்று சம்பியனானது சிற்றி

Shanmugan Murugavel   / 2024 ஓகஸ்ட் 12 , பி.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்க கொமியுனிட்டி ஷீல்ட் போட்டியில் மன்செஸ்டர் சிற்றி சம்பியனானது.

வெம்ப்ளியில் சனிக்கிழமை (12) நடைபெற்ற இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்க சவால் கிண்ண சம்பியனான மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்கெதிரான இப்போட்டியில் பெனால்டியில் 7-6 என்ற ரீதியில் இங்கிலாந்து பிறீமியர் லீக் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி வென்று சம்பியனானது.

போட்டியின் வழமையான நேர முடிவில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தது. சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை பெர்ணார்டோ சில்வாவும், யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை அலெஜான்ட்ரோ கர்னாச்சோவும் பெற்றனர்.

பெனால்டியில் சில்வாவின் உதையை யுனைட்டெட்டின் கோல் காப்பாளர் அன்ட்ரே ஒனானா தடுத்தபோதும், ஜடோன் சஞ்சோவின் உதையை சிற்றியின் கோல் காப்பாளர் எடெர்சன் தடுத்ததுடன், யுனைட்டெட்டின் ஜொனி இவான்ஸ் தனதுதையை கோல் கம்பத்துக்கு மேலால் செலுத்தியிருந்தார்.

சிற்றி சார்பாக கெவின் டி ப்ரூனே, எர்லிங்க் பிறோட் ஹலான்ட், சவின்ஹோ, எடெர்சன், மதெயுஸ் நுனேஸ், ருபென் டியஸ், மனுவல் அகஞ்சி ஆகியோர் தமதுதைகளை உட்செலுத்தியதுடன், யுனைட்டெட்டின் ப்ரூனோ பெர்ணாண்டஸ், டியகோ டலொட், கர்னாச்சோ. கஸேமீரோ, லிஸான்ட்ரோ மார்டினெஸ் ஆகியோர் தமதுதைகளை உட்செலுத்தியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .