2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2024 ஜூன் 20 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், சென். லூசியாவில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுடனான குழு இரண்டு சுப்பர் – 8 சுற்றுப் போட்டியில் இங்கிலாந்து வென்றது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்தின் அணித்தலைவர் ஜொஸ் பட்லர், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், பிரண்டன் கிங்கின் 23 (13), ஜோன்சன் சார்ள்ஸின் 38 (34), நிக்கலஸ் பூரானின் 36 (32), அணித்தலைவர் றொவ்மன் பவலின் 36 (17), ஷெர்ஃபேன் ருதஃபோர்ட்டின் ஆட்டமிழக்காத 28 (15) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், அடில் ரஷீட் 4-0-21-1, மொயின் அலி 2-0-15-1, ஜொஃப்ரா ஆர்ச்சர் 4-0-34-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

பதிலுக்கு 182 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, பில் ஸோல்டின் ஆட்டமிழக்காத 87 (47), ஜொனி பெயார்ஸ்டோவின் ஆட்டமிழக்காத 48 (26) ஓட்டங்களோடு 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில் றொஸ்டன் சேஸ் 3-0-19-1, குடகேஷ் மோட்டி 4-0-32-0 என்ற பெறுதியைக் கொண்டிருந்தார்.

இப்போட்டியின் நாயகனாக ஸோல்ட் தெரிவானார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .