Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 15 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்துக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் நியூசிலாந்து ஆதிக்கம் செலுத்துகிறது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வென்ற இங்கிலாந்து தொடரை ஏற்கெனவே கைப்பற்றியுள்ள நிலையில், ஹமில்டனில் சனிக்கிழமை (14) ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நியூசிலாந்து, மிற்செல் சான்ட்னெரின் 76, அணித்தலைவர் டொம் லேதமின் 63, கேன் வில்லியம்சனின் 44, வில் யங்கின் 42 ஓட்டங்களோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 347 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் மத்தியூ பொட்ஸ் 4, குஸ் அட்கின்ஸன் 3, பிறைடன் கார்ஸ் 2, அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, மற் ஹென்றி (4), வில்லியம் ஓ ருர்க் (3), மிற்செல் சான்ட்னெரிடம் (3) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 143 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில் ஜோ றூட் 32, ஸ்டோக்ஸ் 27, ஒலி போப் 24, ஸக் குறோலி 21 ஓட்டங்களைப் பெற்றனர்.
இந்நிலையில் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் நியூசிலாந்து,இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. களத்தில் வில்லியம்சன் 50 ஓட்டங்களுடனும், றஷின் றவீந்திர இரண்டு ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமலுள்ளனர். முன்னதாக 60 ஓட்டங்களுடன் யங் ஆட்டமிழந்திருந்தார். பந்துவீச்சில் ஸ்டோக்ஸ் 2, அட்கின்ஸன் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
4 hours ago
4 hours ago