2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை

மூன்றாமிடத்துக்கு முன்னேறிய பாண்டியா

Shanmugan Murugavel   / 2024 ஒக்டோபர் 14 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு இந்தியாவின் ஹர்திக் பாண்டியா முன்னேறியுள்ளார்.

பங்களாதேஷுக்கெதிரான முதலாவது போட்டியில் 39 ஓட்டங்களைப் பெற்றதோடு, ஒரு விக்கெட்டைக் கைப்பற்றிய நிலையிலேயே ஏழாமிடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தை பாண்டியா அடைந்துள்ளார்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களுக்கான தரவரிசை பின்வருமாறு,

  1. லியம் லிவிங்ஸ்டோன், 2. டிபேந்திர சிங் ஐரீ, 3. ஹர்திக் பாண்டியா, 4. மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், 5. சிகண்டர் ராசா.

இதேவேளை குறித்த போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்தியாவின் அர்ஷ்டீப் சிங், பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் 16ஆம் இடத்திலிருந்து எட்டு இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. அடில் ரஷீட், 2. அகீல் ஹொஸைன், 3. ரஷீட் கான், 4. குடகேஷ் மோட்டி, 5. வனிது ஹசரங்க, 6. அடம் ஸாம்பா, 7. பஸல்ஹக் பரூக்கி, 8. அன்றிச் நொர்கியா, அர்ஷ்டீப் சிங், 10. மகேஷ் தீக்‌ஷன.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ட்ரெவிஸ் ஹெட், 2. சூரியகுமார் யாதவ், 3. பில் ஸோல்ட், 4. பாபர் அஸாம், 5. யஷஸ்வி ஜைஸ்வால், 6. மொஹமட் றிஸ்வான், 7. ஜொஸ் பட்லர், 8. நிக்கலஸ் பூரான், 9. ருத்துராக் கைகவாட், 10. ஜொஷ் இங்லிஸ்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X