Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 03, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 29 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டானது முகாமையாளர் எரிக் டென் ஹக்கை நீக்கியுள்ளது.
இந்நிலையில் புதிய முகாமையாளரை யுனைட்டெட் தேடுகின்ற நிலையில் தற்காலிக அடிப்படையில் உதவிப் பயிற்சியாளர் ருட் வான் நிஸ்டெல்ரூய் முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டென் ஹக்கைப் பிரதியிடுவதில் வான் நிஸ்டெல்ரூய் முன்னிலையில் உள்ளதுடன் அப்பட்டியலில் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் முன்னாள் முகாமையாளர் ஸ்கெவி, போர்த்துக்கல் கழகமான ஸ்போர்டிங்கின் முகாமையாளரான ருபென் அமோரிம், பிறீமியர் லீக் கழகமான பிரென்ஃபோர்ட்டின் முகாமையாளரான தோமஸ் பிராங்க், பிறீமியர் லீக் கழகமான செல்சியின் முன்னாள் முகாமையாளரான கிரஹாம் பொட்டர், பிறீமியர் லீக் கழகமான இப்ஸ்விச் டெளணின் முகாமையாளரான கெய்ரான் மக்கென்னா ஆகியோரும் காணப்படுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .