2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

பார்சிலோனாவிலிருந்து வெளியேறும் கிறிஸ்டென்சன்?

Shanmugan Murugavel   / 2024 நவம்பர் 27 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் பின்களவீரரான அன்ட்றியாஸ் கிறிஸ்டென்சன் அக்கழகத்தை விட்டு ஜனவரியில் வெளியேறலாமெனக் குறிப்பிடப்படுகிறது.

பின்களத்தில் வேறு தெரிவுகளும் இருக்கின்ற நிலையில் 28 வயதான கிறிஸ்டென்சனுக்கு அணியில் தொடர்ந்து வாய்ப்புகள் குறித்து உறுதிமொழியை வழங்க முடியுமாவென பார்சிலோனா தெளிவில்லாமலுள்ளது.

எதிர்வரும் 2026ஆம் ஆண்டுடன் கிறிஸ்டென்சனின் பார்சிலோனாவுடனான ஒப்பந்தம் முடிவடைகின்ற நிலையில் கழகத்தில் இருக்கவே விரும்பிகின்றபோதும் தனது திட்டத்தில் கிறிஸ்டென்சன் இல்லை என பார்சிலோனா முகாமையாளர் ஹன்சி பிளிச் கூறுமிடத்து இதில் மாற்றமிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .