2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தான் குழாமில் பாபர், றிஸ்வான் இல்லை

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 05 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான பாகிஸ்தான் குழாமில் முன்னாள் அணித்தலைவர் மொஹமட் றிஸ்வான் மற்றும் பாபர் அஸாம் ஆகியோர் இடம்பெறவில்லை. நசீம் ஷாவும் இக்குழாமில் இடம்பெறவில்லை.

குறித்த குழாமில் ஷடாப் கான் இடம்பெற்றுள்ளதோடு, உப அணித்தலைவராகவும் பெயரிடப்பட்டுள்ளார். அணித்தலைவராக சல்மான் அக்ஹா பெயரிடப்பட்டுள்ளார். மொஹமட் ஹரிஸும் குழாமில் இடம்பெற்றுள்ளார்.

இதேவேளை ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமில் ஷகீன் ஷா அஃப்ரிடி, ஹரிஸ் றாஃப் இடம்பெறவில்லை.

இ-20 குழாம்: ஹஸன் நவாஸ், ஓமைர் யூசுஃப், மொஹமட் ஹரிஸ், அப்துல் சமட், சல்மான் அக்ஹா (அணித்தலைவர்), இர்ஃபான் நியாஸி, குஷ்டில் ஷா, ஷடாப் கான், அப்பாஸ் அஃப்ரிடி, ஜஹன்டட் கான், மொஹமட் அலி, ஷகீன் ஷா அஃப்ரிடி, ஹரிஸ் றாஃப், சுஃபியான் முக்கீம், அப்ரார் அஹ்மட், உஸ்மான் கான்.

ஒருநாள் குழாம்: மொஹமட் றிஸ்வான் (அணித்தலைவர்), சல்மான் அக்ஹா, அப்துல்லாஹ் ஷஃபிக், அப்ரார் அஹ்மட், அகிஃப் ஜாவீட், பாபர் அஸாம், பாஹீம் அஷ்ரஃப், இமாம்-உல்-ஹக், குஷ்டில் ஷா, மொஹமட் அலி, மொஹமட் வாஸிம் ஜூனியர், இர்ஃபான் நியாஸி, நசீம் ஷா, சுஃபியான் முக்கீம், தயாப் தஹிர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X