2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பாகிஸ்தானுக்கெதிரான தொடரைக் கைப்பற்றுமா பங்களாதேஷ்?

Shanmugan Murugavel   / 2024 ஓகஸ்ட் 30 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்டானது இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை பங்களாதேஷ் வென்ற நிலையில், இப்போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் பாகிஸ்தான் காணப்படுகின்றது.

பாகிஸ்தானைப் பொறுத்த வரையில் கடந்த போட்டியில் விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் ஷகீன் ஷா அஃப்ரிடியை சுழற்பந்துவீச்சாளர் அப்ரார் அஹ்மட் பிரதியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கமாக பங்களாதேஷ் அணியில் மாற்றமிருக்காதெனக் கருதப்படுகிறது. 

முதலாவது டெஸ்ட் விளையாடிய அதே மைதானத்திலேயே இப்போட்டியும் இடம்பெறுகின்ற நிலையில் ஆடுகளம் பெரும்பாலும் துடுப்பாட்டத்துக்கு சாதகமானதாகவே இருக்குமெனக் கருதப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .