2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பரிஸ் 2024: முதலிடம் பிடித்த ஐக்கிய அமெரிக்கா

Shanmugan Murugavel   / 2024 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸில் நடைபெற்று வந்த பரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளானவை ஞாயிற்றுக்கிழமை (11) முடிவுக்கு வந்த நிலையில் பதக்கப் பட்டியலில் ஐக்கிய அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது.

ஐ. அமெரிக்காவும் சீனாவும் தலா 40 தங்கப் பதக்கங்களையே பெற்றபோதும் 44 வெள்ளிப் பதக்கங்களை ஐ. அமெரிக்கா பெற்றதோடு, 27 வெள்ளிப் பதக்கங்களையே சீனா பெற்றதாலேயே பதக்கப் பட்டியலில் ஐ. அமெரிக்கா முதலிடம் பெற, சீனா இரண்டாமிடத்தைப் பெற்றது.

இதேவேளை 42 வெண்கலப் பதக்கங்களோடு ஐ. அமெரிக்கா 126 பதக்கங்களை மொத்தமாகப் பெற்ற நிலையில், 24 வெண்கலப் பதக்கங்களோடு 91 பதக்கங்களை சீனா பெற்றிருந்தது.

20 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் உள்ளடங்கலாக 45 பதக்கங்களுடன் மூன்றாமிடத்தை ஜப்பான் பெற்றதுடன், 18 தங்கம், 19 வெள்ளி, 16 வெண்கலப் பதக்கங்களுடன் 53 பதக்கங்களுடன் நான்காமிடத்தை அவுஸ்திரேலியா பெற்றிருந்ததுடன்,16 தங்கம்,  26 வெள்ளி, 22 வெண்கலப் பதக்கங்களுடன் 64 பதக்கங்களுடன் ஐந்தாமிடத்தை பிரான்ஸ் பெற்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X