2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பங்களாதேஷை வென்ற இந்தியா

Shanmugan Murugavel   / 2024 ஜூன் 03 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருக்கான பயிற்சிப் போட்டிகளில், ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க்கில் சனிக்கிழமை (01) நடைபெற்ற பங்களாதேஷுடனான போட்டியில் இந்தியா வென்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, றிஷப் பண்டின் 53 (32), ஹர்திக் பாண்டியாவின் ஆட்டமிழக்காத 40 (23) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், மஹெடி ஹஸன் 4-0-22-1, ஷொரிஃபுல் இஸ்லாம் 3.5-0-26-1, மகமதுல்லா 2-0-16-1, தன்ஸிம் ஹஸம் சகிப் 1.1-0-6-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

பதிலுக்கு 183 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், அர்ஷ்தீப் சிங் (2), மொஹமட் சிராஜ், அக்ஸர் பட்டேல், பாண்டியா, ஜஸ்பிரிட் பும்ரா, ஷிவம் டுபேயிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களையே பெற்று 60 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் மகமதுல்லா 40 (28) ஓட்டங்களைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .