Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2024 ஏப்ரல் 23 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியாவில் இடம்பெற்று வரும் ஏப்பிரல் வசந்தகால விழாவினை சிறப்பிக்கும் வகையில் "battle of little England" கிண்ணத்துக்கான மாபெரும் கடினப்பந்து கிரிக்கெட் போட்டி இடம்பெறவுள்ளது.
இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை பலப்படுத்தும் வகையில் நுவரெலியா மாநகர சபை பொது மைதானத்தில் இந்த மாபெரும் கிரிக்கெட் போட்டிகளை இம்மாதம் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு, நுவரெலியா கல்வி வலையத்துக்கு உட்பட்ட பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரி, காமினி தேசிய பாடசாலையின் அதிபர்கள் தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் அதிசய மண்டபத்தில், செவ்வாய்க்கிழமை (23) காலை இடம்பெற்றது.
இந்த ஊடக சந்திப்பில் ஆசிரியர்கள்,மாணவர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்களும் பங்குபற்றியிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த நுவரெலியா பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரி அதிபர் எம். ரவிச்சந்திரன்,
நுவரெலியாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை பலப்படுத்தும் "battle of little England" கின்னத்திற்கான கிரிகெட் போட்டி பாரிய வெற்றியை தந்திருந்தது.
அதேபோல இந்த ஆண்டுக்கான போட்டியும் வெகு சிறப்பாக நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆகையால் இப்போட்டி சிறப்பாக இடம்பெற, பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் தற்போதைய மாணவர்கள் நலன் விரும்பிகள் அனைவரையும் ஒத்துழைப்பு தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த கிரிகெட் போட்டி தொடர்பாக நுவரெலியா நகரில் எதிர்வரும் ( 27) ஆம் திகதி வாகன பேரணி நடத்துவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago