Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2024 மே 29 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயங்கரவாதத் தாக்குதலுக்கான அச்சுறுத்தலை விடுக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் படமொன்று வெளியிடப்பட்டுள்ளன.
துப்பாக்கியை முதுகில் சுமந்தவாறு, முகமூடி அணிந்த நபரொருவர், நியூயோர்க் கிரிக்கெட் மைதானத்தை பார்த்துக் கொண்டிருக்கும் வகையில் இந்த படம் சித்திரிக்கப்பட்டுள்ளது.
“நீங்கள் போட்டிக்காக காத்திருங்கள்” என்று எழுதப்பட்டு, ரத்தச் சிவப்பு நிறத்தில் – “நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம்” என இந்த படத்திலுள்ள நபரின் மீது எழுதப்பட்டுள்ளது.
மேலும், இந்த வசனம் முடிவுறும் இடத்தில் டைனமைட் குச்சியுடன் கூடிய கடிகாரமொன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், மைதானத்தில் ட்ரோன் கமராக்கள் பறக்கும் வகையிலும் இந்த படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, “நாசாவ் ஸ்டேடியத்தில்” என குறிப்பிட்டு, 09/06/2024 என்ற திகதி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
நாசாவ் ஸ்டேடியத்தில், இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ஜூன் மாதம் 09ம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த விடயம் தொடர்பில், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊடகப் பேச்சாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
“போட்டிக்கு வரும் அனைவரின் பாதுகாப்பும் எங்கள் முதல் முன்னுரிமையாகும், மேலும் எங்களிடம் விரிவான மற்றும் வலுவான பாதுகாப்புத் திட்டம் உள்ளது.” என அவர் கூறியுள்ளார்.
ICC T20 உலகக் கிண்ணப் போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளை மையமாகக் கொண்டு ஜூன் முதலாம் திகதி முதல் ஜூன் 29ம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
42 minute ago
54 minute ago