2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

நியூசிலாந்து 319 ஓட்டங்கள் குவிப்பு

Mayu   / 2024 நவம்பர் 28 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் வியாழக்கிழமை (28) அதிகாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகியது. இதில் நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன கான்வே 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அணித்தலைவர் டொம் லத்தம் உடன் ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் பொறுப்புடன் விளையாடி அணியை முன்னெடுத்து சென்றனர்.

நிலைத்து விளையாடிய இந்த ஜோடியை பிரைடன் கார்ஸ் பிரித்தார். அவரது பந்துவீச்சில் லத்தம் 47 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. ரச்சின் ரவீந்திரா 34 ஓட்டங்களிலும், டேரில் மிட்செல் 18 ஓட்டங்களிலும், டொம் பிளண்டல் 17 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் வில்லியம்சன் நிலைத்து விளையாடினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 93 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகளை இழந்து 319 ஓட்டங்கள் குவித்துள்ளது. 

கிளென் பிலிப்ஸ் 41 ஓட்டங்களுடனும், டிம் சவுதி 10 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் சோயப் பஷீர் 4 விக்கெட்டுகளும், கஸ் அட்கின்சன் மற்றும் பிரைடன் கார்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி உள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .