2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

நாளை ஆரம்பிக்கிறது மூன்றாவது டெஸ்ட்

Shanmugan Murugavel   / 2024 டிசெம்பர் 13 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது ஹமில்டனில் நாளை அதிகாலை 3.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் வென்று தொடரை இங்கிலாந்து ஏற்கெனவே கைப்பற்றியுள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியிலிருந்து நியூசிலாந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது குழந்தை பிறப்புக்காக இப்போட்டியை டெவோன் கொன்வே தவறவிடவுள்ள நிலையில் அவரை அணியில் வில் யங்க் பிரதியிடவுள்ளார்.

இத்தொடரில் டிம் செளதி மோசமாகச் செயற்பட்டபோதும் இப்போட்டியுடன் அவர் ஓய்வு பெறுகின்ற நிலையில அவர் அணியில் இடம்பெறுவாரென எதிர்பார்க்கப்படுகின்றது.

மறுபக்கமாக இங்கிலாந்து அணியில் மாற்றமெதுவுமிருக்காதெனக் கருதப்படுகின்றபோதும் ஸக் குறோலியிடமிருந்து நியூசிலாந்து மண்ணில் ஓட்டங்களை இங்கிலாந்து எதிர்பார்க்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X