2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

தொடரைச் சமப்படுத்துமா இந்தியா?

Shanmugan Murugavel   / 2025 ஜனவரி 02 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது சிட்னியில் நாளை அதிகாலை 5 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை இந்தியாவும், இரண்டாவது போட்டியை அவுஸ்திரேலியாவும் வென்ற நிலையில் மூன்றாவது போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்திருந்தது. நான்காவது போட்டியில் அவுஸ்திரேலியா வென்ற நிலையில் 2-1 என்ற நிலையில் அவ்வணி தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் தொடரைச் சமப்படுத்துவதற்கும், சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பைக் கொண்டிருப்பதற்கும் ஐந்தாவது போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் காணப்படுகின்றது.

இந்தியாவைப் பொறுத்த வரையில் அணித்தலைவர் றோஹித் ஷர்மா இப்போட்டியுடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவாரெனக் கூறப்படுகின்ற நிலையில் அவரும், விராட் கோலி, றிஷப் பண்ட் ஆகியோரின் பெறுபேறுகள் பலத்த விமர்சனத்தை எதிர்நோக்கியுள்ளது.

மறுபக்கமாக அவுஸ்திரேலிய அணியில் மிற்செல் மார்ஷை அறிமுக வீரர் பியூ வெப்ஸ்டர் பிரதியிட்டுள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X