2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

தென்னாபிரிக்காவை வென்ற பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2024 டிசெம்பர் 18 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பாகிஸ்தான் வென்றது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், பார்ளில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்காவின் அணித்தலைவர் ஏய்டன் மார்க்ரம் தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, சல்மான் அக்ஹா (4), சைம் அயூப், அப்ரார் அஹ்மட் (2), ஷகீன் ஷா அப்ரிடியிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்திருந்த நிலையில் ஹென்றிச் கிளாசென்னின் 86 (97), றயான் றிக்கெல்டனின் 36 (38), டொனி டி ஸொர்ஸியின் 33 (25) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 239 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு 240 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், மார்கோ ஜன்சன், ஒட்னெய்ல் பார்ட்மன் (2), ககிஸோ றபாடா (2), தப்ரையாஸ் ஷம்சியிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தபோதும் அயூப்பின் 109 (119), அக்ஹாவின் ஆட்டமிழக்காத 82 (90) ஓட்டங்களோடு 49.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக அக்ஹா தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X