2025 ஜனவரி 30, வியாழக்கிழமை

டொட்டென்ஹாமை வென்ற எவெர்ற்றன்

Shanmugan Murugavel   / 2025 ஜனவரி 20 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பருடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றன் வென்றது.

எவெர்ற்றன் சார்பாக டொமினிக் கல்வேர்ட்-லூயின், இலிமான் என்டியாயே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு மற்றைய கோல் ஓவ்ண் கோலாகப் பெறப்பட்டிருந்தது. டொட்டென்ஹாம் சார்பாக டெஜன் குலுவென்ஸ்கி, றிஷலிஷன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனுடனான போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் தோற்றது. யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை ப்ரூனோ பெர்ணாண்டஸ் பெற்றார். பிறைட்டன் சார்பாக யங்குபா மின்டெஹ், கரூ மிடோமா, ஜோர்ஜினோ ருட்டர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 50 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் லிவர்பூல் காணப்படுகின்றது. 44 புள்ளிகளுடன் ஆர்சனலும், நொட்டிங்ஹாம் பொரெஸ்டும் காணப்படுகின்றபோதும் கோலெண்ணிக்கை அடிப்படையில் இரண்டாம், மூன்றாமிடங்களில் முறையே ஆர்சனலும், பொரெஸ்டும் காணப்படுகின்றன. தலா 38 புள்ளிகளுடன் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றியும், நியூகாசில் யுனைட்டெடும் காணப்படுகின்றபோதும் கோலெண்ணிக்கை அடிப்படையில் நான்காம், ஐந்தாமிடங்களில் முறையே சிற்றி, நியூகாசில் ஆகியன காணப்படுகின்றன. இதில் லிவர்பூல் ஏனைய அணிகளை விட ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .