2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பிக்கிறது

Shanmugan Murugavel   / 2024 டிசெம்பர் 26 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது புலவாயோவில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் தொடங்குகின்றது.

இப்போட்டியிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக ஆப்கானிஸ்தானின் ரஷீட் கான் விலகியுள்ள நிலையில் ஆப்கானிஸ்தானின் குழாமில் அல்லாஹ் மொஹமட் கஸன்ஃபார் சேர்க்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் அண்மைய காலங்களில் ரஷீட் கானின் பங்களிப்பு குறைவென்ற நிலையில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் குறைவாகும்.

ஆப்கானிஸ்தான் சார்பாக கஸன்ஃபார், ஆரம்பப்த் துடுப்பாட்டவீரர் செடிகுலாஹ் அடல் ஆகியோர் அறிமுகத்தை மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பாப்வேயைப் பொறுத்த வரையில் அவ்வணியானது வழமைபோன்று அணித்தலைவர் கிறேய்க் எர்வின், ஷோன் வில்லியம்ஸ், சிகண்டர் ராஸா போன்ற சிரேஷ்ட வீரர்களிலும் பிளஸிங்க் முஸர்பனி, றிச்சர்ட் நகரவாவிடம் வேகப்பந்துவீச்சிலும் தங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X